திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 120

திருப்பாடல்கள் 120

திருப்பாடல் 120

உதவிக்காக மன்றாடல்

1 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.

2 ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.

3 வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?

4 வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!

5 ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும்,

6 சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.

7 நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!